நெல்லை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.51 லட்சம் மோசடி - இருவர் கைது


நெல்லை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45.51 லட்சம் மோசடி - இருவர் கைது
x

கோப்புப்படம் 

விசாரணை மேற்கொண்ட நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இருவரை கைது செய்தனர்

நெல்லை,

நெல்லை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 45 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இருவரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்க, ஒரு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். பல்வேறு வங்கி கணக்களுக்கு 45 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர்கள் பணி வாங்கி தராமல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், பெங்களூரு, சுகாட்டா நகரில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த அலுக்கோ ஒலுவா டோபி ஜோன்ஸ் என்பவரையும், உத்தரகன்னடாவைச் சேர்ந்த பவன் கல்லப்பா மால்வி என்பவரையும் கைது செய்தனர்.


Next Story