நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுமா?
அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கம் பணி தொடங்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நீடாமங்கலம்:
அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்டவரிசையில் வாகங்கள் காத்துக்கிடப்பதால் நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கம் பணி தொடங்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. நீடாமங்கலம் நகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நீடாமங்கலம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன.
நீடாமங்கம் வழியாக காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரெயிலும், சென்னை, கோவை, திருப்பதி, எர்ணாகுளம், வாஸ்கோடகாமா, ஜோத்பூர் ஆகிய பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்று வருகின்றன.
அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்
நீடாமங்கலம் வழியாக சரக்கு ெரயில்கள் மூலம் நெல் மூட்டைகள் அடிக்கடி ஏற்றி செல்லப்படுகிறது. ரெயில்கள் வந்து செல்லும் போது நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.
இதன் காரணமாக சாலையின் இருபக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியாக புறவழிச்சாலைத்திட்டம் கொண்டுவர வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புறவழிச்சாலை திட்டம்
கடந்த கால மத்திய ஆட்சியில் முதலில் நீடாமங்கலம் புறவழிச்சாலைத் திட்டத்திற்கு முதலில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பின்னர் திருச்சி முதல் நாகை வரையில் நான்கு வழிச்சாலைத்திட்டம் கொண்டு வரப்பட்டதால் புறவழிச்சாலைத்திட்டம் கைவிடப்பட்டது.
நான்கு வழிச்சாலைத் திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலைத்திட்டம் இரண்டு வழிச்சாலைத்திட்டமாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரெயில்வே மேம்பாலம்
நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வுக்கான மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீடாமங்கலத்தில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீ்ட்டை தயாரித்து மேம்பாலம் அமைக்க வரைப்படத்தையும் தயாரித்தனர்.
ெரயில்வே உயரதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு மேம்பாலம் அமைக்கப்பட உள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
ரூ.5 கோடியே 92 லட்சம் ஒதுக்கீடு
இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.53 கோடியே 92 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் எந்த பணியுமே நடைபெறவில்லை.
தற்போதைய தமிழக அரசு மேம்பால பணிக்காக ஆரம்பகட்ட நிதி ரூ.10.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மத்திய ெரயில்வே அமைச்சகம் நாடெங்கிலும் ெரயில்களின் வேகத்தை அதிகரித்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பணியை விரைந்து தொடங்க வேண்டும்
மத்திய அரசின் ெரயில்வே அமைச்சக முடிவின் படி நெடுஞ்சாலைப்பகுதிகளில் ெரயில்வே கேட் உள்ள பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் சாலை போக்குவரத்து நெருக்கடியை போக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.