கயத்தாறு அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு


கயத்தாறு அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 3:04 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

புதிய டிரான்ஸ்பார்மர்

கயத்தாறு அருகேயுள்ள சிதம்பரம்பட்டி அண்ணா நகரில் மின்சார பற்றாகுறையை போக்கும் வகையில் புதிதாக 63 கே.வி.திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் மிகாவேல், கயத்தாறு உதவி செயற்பொறியாளர் முனியசாமி, இளநிலை பொறியாளர்கள் விஷ்ணு சங்கர், பெரியசாமி, தங்கராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரசூர் காளிபாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளியில் சமையலறை திறப்பு

கயத்தாறு அருகேயுள்ள அகிலாண்டபுரம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் தலைமை ஆசிரியர் துரை வரவேற்று பேசினார். இவ்விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கயத்தாறு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வட்டாணம் கருப்பசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கயத்தாறு வட்டார கல்வி அலுவலர் கணேசன், ஓய்வுபெற்ற அதிகாரி எலிசபெத் ராணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி உதவி ஆசிரியை தங்கமேரி நன்றி கூறினார்.

-


Next Story