செம்பரம்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
செம்பரம்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையில் சென்ற கார் முன்பு திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் மாடு மீது மோதாமல் இருக்க காரை ஓட்டி வந்தவர் பிரேக் பிடித்தார். இதனால் காரின் பின்னால் வந்த கார், பஸ் ஆகியவை அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் 2 வாகனங்களுக்கு இடையில் சிக்கிய கார் ஒன்று பலத்த சேதமடைந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் வாகனத்தில் வந்தவர்கள் லேசாக இடித்து கொண்டதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.