கேர்மாளம் அருகே கிராமத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தைப்புலி


கேர்மாளம் அருகே கிராமத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தைப்புலி
x

கேர்மாளம் அருகே கிராமத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்தது.

ஈரோடு

தாளவாடி

கேர்மாளம் அருகே கிராமத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்து சிறுத்தைப்புலி மீண்டும் அட்டகாசம் செய்து உள்ளது.

சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் புலி மற்றும் சிறுத்தைப்புலி போன்றவை வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேர்மாளத்தை அடுத்த காடட்டி அருகே உள்ள பேடர்பாளையத்துக்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து உள்ளது. பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராஜன் என்பவரின் வீட்டின் முன்பு பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளை கடித்து கொன்றது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டதுடன், அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தைப்புலியின் கால் தடம்தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

மீண்டும் அட்டகாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மீண்டும் ராஜன் வீட்டு பகுதிக்கு சிறுத்தைப்புலி வந்து உள்ளது. அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து உள்ளது. இதனால் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜன் திடுக்கிட்டு எழுந்து வந்து பார்த்தார். அப்போது அவருடைய கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து கொண்டிருந்ததை கண்டு பீதியில் உறைந்தார். உடனே அவர் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் சிறுத்தைப்புலியை பார்த்து சத்தம் போட்டு கத்தினர். அவர்களுடைய சத்தம் கேட்டு கன்றுக்குட்டியை விட்டு விட்டு சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் ஓடியது. சிறுத்தைப்புலி கடித்ததில் கன்றுக்குட்டியின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'தொடர்ந்து 2-வது நாளாக கிராமத்துக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story