நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்


நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம்
x

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கந்தூரி விழா

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 31-ந் தேதி வாணவேடிக்கையும், நேற்று முன்தினம் இரவு பீர் அமரவைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

சந்தனக்கூடு ஊர்வலம்

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்னரதம், ஆகியவை நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு வந்தடைந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.நாகூர்-நாகை சாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்ததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.இந்த ஊர்வலத்தையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story