திருச்செங்கோடு, குமாரபாளையம் நாடார் சங்கங்கள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


திருச்செங்கோடு, குமாரபாளையம் நாடார் சங்கங்கள் சார்பில்  காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

திருச்செங்கோடு, குமாரபாளையம் நாடார் சங்கங்கள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல்

திருச்செங்கோடு, குமாரபாளையம் நாடார் சங்கங்கள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இனிப்பு

திருச்செங்கோடு சான்றோர் குல நாடார் திருமண மண்டபம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மாணிக்கம், பொருளாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து சங்க உறுப்பினர்கள் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கொங்கு நாடு சான்றோர் குல நாடார் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் உதயா வெங்கடேஷ் உள்பட முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் கொங்கு நாடு நாடார் சங்கம், குமாரபாளையம் நாடார் அறக்கட்டளை ஆகியவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அன்னதானம்

இதில் குமாரபாளையம் நாடார் அறக்கட்டளை பொருளாளர் தங்கராஜ், கொங்குநாடு நாடார் சங்கத்தின் தலைவர் ராமசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தேவசகாயம், துணை செயலாளர் சண்முகராஜன், துணைத்தலைவர் முனியப்பன், ரவீனா ரவிச்சந்திரன், விஜயலட்சுமி, ஊராட்சி உறுப்பினர் குஞ்சாள், முன்னாள் உறுப்பினர்கள் சரஸ்வதி, ‌சங்க செயற்குழு உறுப்பினர்கள் காஜா கே.என்.முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஓலப்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஜோசப் சந்தானம், நிர்வாகி செல்வநாயகம், கல்லங்காட்டுவலசு குமரேஷ், கோட்டைமேடு அரிசி மணி, தங்கவேல், முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story