திருத்தணியில் 'நான் முதல்வன்' நிகழ்ச்சி


திருத்தணியில் நான் முதல்வன் நிகழ்ச்சி
x

‘நான் முதல்வன்' நிகழ்ச்சி திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது.

திருவள்ளூர்

திருத்தணி கோட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-2023 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான 'உயர்வுக்கு படி' என்ற நிகழ்ச்சி திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் போசும்போது, 'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் 'உயர்வுக்கு படி' வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கல்வி வாழ்வில் உயர்வுக்கு மிக அவசிமான ஒன்றாகும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தொடர் கல்வியின் மூலம் நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும். பிளஸ்-2 முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயின்றிட வேண்டும். தங்களுடைய படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படும்' என தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி சம்பந்தமான தகவல்கள் அடங்கிய புதுமைப் பெண் புத்தகம் மற்றும் நான் முதல்வன் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.


Next Story