சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி சொத்துகள் மீட்பு


சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி சொத்துகள் மீட்பு
x

சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை

சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 3 கிரவுண்ட் 736.5 சதுர அடி இடத்தில் அமைந்துள்ள ரானடே நூலகத்துக்கு தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை உத்தரவின் அடிப்படையில் தனியே வாடகை நிர்ணயம் செய்து கோவிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது. ரானடே நூலகத்துக்கு நியாய வாடகை 0.1 சதவீதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது.

மேற்படி நிறுவனம் தற்போது கட்டிடத்தின் மாடி பகுதியில் வணிக நோக்கில் பட்டய வகுப்பு, கச்சேரி ஆகியவற்றுக்கு வாடகைக்கு விட்டு வாடகை வசூல் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் இயங்கி வரும் கட்டிடத்தின் முதல் மாடியில் மேற்கூரையை அகற்றிவிட்டு தளத்துடன் கூடிய முதல் தளம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது கட்டிட துறை மற்றும் கோவிலுக்கு மனு செய்து அனுமதி உத்தரவு வழங்கும் முன்பாகவே , அனுமதியின்றி முதல் தளம் கட்ட முயற்சி செய்யப்பட்டது.

வாடகை நிலுவை தொகை இதை தொடர்ந்து விளக்கங்கள் கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டு, உரிய கால அவகாசம், வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அந்நிறுவனம் விளக்கம் ஏதும் அளிக்காமல் துறை விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி பெறாமல் வர்தா புயல் கால கட்டத்தில் கோவில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனால், மேற்படி நிறுவனத்தின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரசாணை மற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி கோவிலுக்குச் சொந்தமான அனைத்து கட்டிடங்கள், மனைகளுக்கு நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டது. ரானடே நிறுவனத்தாருக்கும் உபயோக படுத்தியமைக்கான நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

ஆனால் அந்நிறுவனத்தார் நியாய வாடகையை செலுத்தாததால் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் கோவில் வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நியாய வாடகை நிலுவையாக ரூ.79 லட்சத்து 10 ஆயிரத்து 860 உள்ளது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் த.காவேரி மற்றும் கோவில் அலுவலர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.


Next Story