குடும்ப பிரச்சினையில் மாமனார் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை


குடும்ப பிரச்சினையில் மாமனார் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x

கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னை

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் குமார் (வயது 52). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஹேம மாலினி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த பிரச்சினையால் 2021-ம் ஆண்டு குமார், வீட்டில் இருந்த மகளை தோசை கரண்டியால் அடித்தார். இதில் குமாருக்கும், அவருடைய மாமனார் ஜெகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், ஜெகநாதனை கத்தியால் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story