மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்னர் எம்.பில். படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இறுதிவாய்ப்பு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  2006-ம் ஆண்டுக்கு முன்னர் எம்.பில். படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இறுதிவாய்ப்பு
x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்னர் எம்.பில். படிப்பில் சேர்ந்தவர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சலீமா ராபியத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் 2006-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக எம்.பில்., படிப்பில் சேர்க்கை பெற்று தற்போது வரை எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு துணைவேந்தரின் வழிகாட்டுதலின்படி, தேர்வு எழுத இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, வருகிற மே மாதம் இந்த படிப்புக்கான தேர்வுகள் நடக்க உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்ட மாணவ-மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம். விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின்www.mkudde.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த துறையை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது துறைத்தலைவர்களை இ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதன்படி, இதற்கான விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் ரூ.500 அபராதத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். தேர்வுகள் வருகிற மே மாதம் 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் ரூ.8 ஆயிரம் சிறப்பு கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500 கட்டணமாகவும், விண்ணப்ப கட்டணமாக ரூ.85, மதிப்பெண் பட்டியலுக்கு ரூ.135, தபால் கட்டணம் ரூ.85 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை https://www.onlinesbi.sbi/sbicollect/payment/listcategory.html என்ற இணையதளம் மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் கணக்கில் மட்டும் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 17-ந் தேதிக்குள், தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வுமையங்கள் மதுரை, சென்னை, திருச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கோவை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story