குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி


குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி
x

காங்கயம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அவைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

காங்கயம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அவைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகள் அட்டகாசம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட அய்யாசாமி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சில குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை வீடு,கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்கள், உணவு பொருட்களை எடுத்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

காங்கயம் அய்யாசாமி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில குரங்குகள் இங்கு வந்து சுற்றித்திரிகின்றன.

அவை தெருவில் யாராவது கைகளிலோ அல்லது பைகளிலோ பழங்கள், தின்பண்டங்கள், உணவு பொருட்கள் கொண்டு சென்றால் வந்து அவற்றை பறித்துக்கொள்கிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள் கைகளில் இருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்கிறது. கடைகளில் வாழைப்பழம், பாக்கெட் தின்பண்டங்கள்,காய்கறிகள் போன்றவற்றை திறந்த வெளியில் வைக்க முடிவதில்லை.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

திடீரென வரும் குரங்கு அவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது. அவற்றை விரட்ட முயன்றால் எங்களை எதிர்த்து கொடூரமாக கத்திக்கொண்டு கடிக்க வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பீதியில் உள்ளோம்.

இந்த குரங்குகள் அருகில் உள்ள ஊதியூர் மலை மற்றும் சிவன்மலை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட காங்கயம் வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிகளில் கொண்டுபோய் விட வேண்டும் என அய்யாசாமி நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story