எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடைசெல்வராஜ், கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெய்சிங், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிஹரன், பஞ்சவர்ணம் மற்றும் நிர்வாகிகள் விஜயன், குணசேகர், செல்வராஜ், அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நத்தம்
இதேபோல் நத்தம் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க. நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். இதையொட்டி எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர பேரவை செயலாளர் சேக்தாவூது, பண்ணுவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டிச்சாமி, அவைத்தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, நகர பொருளாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் குப்பான், ராமமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பழனி நகர அ.தி.மு.க.
பழனி நகர அ.தி.மு.க. சார்பில், எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சி பழனி பெரியப்பாநகரில் நடந்தது. இதற்கு நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.யும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான குமாரசாமி, பழனி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஆயக்குடி பேரூர் செயலாளர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, விவசாய அணி செயலாளர் நடராஜன், மீனவர் பிரிவு செயலாளர் மகுடீஸ்வரன் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாவட்ட இளைஞரணி
இதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் வேட்பாளர் ரவிமனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ஹக்கீம், சிறுபான்மை அணி செயலாளர் பசீர்அகமது, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சதீஸ்குமார், பாலசமுத்திரம் முன்னாள் பேரூர் செயலாளர் வல்லத்தரசு, நெய்க்காரப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஹக்கீம்ராஜா, மாவட்ட பிரதிநிதி கருப்புசாமி மற்றும் கவுன்சிலர்கள் கிருஷ்ணன், நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் குகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேடசந்தூர்
வேடசந்தூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார்.
மாநில இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் வி.பி.பி. பரமசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை செயலாளர் ஜான்போஸ், எரியோடு நகர செயலாளர் அறிவாளி, ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பூக்கடை ஆறுமுகம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நிலா தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி தங்கராஜ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குஜிலியம்பாறை
குஜிலியம்பாறை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், குஜிலியம்பாறை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குஜிலியம்பாறை அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், பாளையம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ராமசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், உதயசந்திரன், குமரேசன், முனியாண்டி, கருப்பசாமி, ஜோனம நாயக்கர், பாலசுப்பிரமணி, முருகன், பாண்டி, வெற்றி, அப்பாவு, காளியப்பன், வடிவேல்முத்து, செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ேவடசந்தூரில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய தலைவருமான சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் ஷேக்பரீத், கிழக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், எரியோடு நகரசெயலாளர் புல்லட்பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் மேனகா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய அவைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் பஞ்சவர்ணம், சித்ரா, வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்வீரக்குமார், வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வீரப்பன், அய்யலூர் நகர செயலாளர் செல்வராஜ், ஓட்டுனர் அணி பிரிவு நிர்வாகி காளிதாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.