எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
x

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மங்காயி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து தேரடி, மார்க்கெட் தெரு வழியாக ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலையை அடைந்தனர். தொடர்ந்து அங்கு சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல் மீன்சுருட்டி பகுதியில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் அ.ம.மு.க. சார்பில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து 50-க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story