எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM (Updated: 17 Jan 2023 6:45 PM)
t-max-icont-min-icon

மணல்மேட்டில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மணல்மேடு பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மதன், ஒன்றிய பொருளாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story