மெட்ரோ ரெயில் நிலைய கட்டுமான பணிகள்: அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்..விவரம்


மெட்ரோ ரெயில் நிலைய கட்டுமான பணிகள்: அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்..விவரம்
x

மெட்ரோ ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் சில போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் சில போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு - ஹாடோஸ் ரோடு - உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.இதேபோல அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை - டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்கு செல்லலாம். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை - உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story