சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் துவக்கம்


சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் துவக்கம்
x
தினத்தந்தி 15 May 2024 9:05 AM GMT (Updated: 15 May 2024 10:39 AM GMT)

மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மீனம்பாக்கம்-விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இடையே இன்று அதிகாலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரெயில்களை இயக்க முடியவில்லை. ஆலந்தூர்-விமான நிலையம் இடையே சேவை முடங்கியது. காலை முதல் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில், மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நேரடி மெட்ரோ சேவை மீண்டும் துவங்கி உள்ளது.


Next Story