மேலப்புலியூர் செல்லியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
மேலப்புலியூர் செல்லியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே இருந்த தேருக்கு பதிலாக, தற்போது சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் புதியதாக தேர் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று புதிய தேரின் வெள்ளோட்டம் நடந்தது. பூஜை செய்யப்பட்ட தேர் கோவிலின் இருந்து தேரோடும் வீதிகளின் வழியாக இழுத்து செல்லப்பட்டு, மீண்டும் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், ஊர் பொதுமக்கள், சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தினை கண்டுகளித்து, அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேலப்புலியூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story