சிறைத்துறை, தீயணைப்பு அலுவலர்களுக்கு மருத்துவ வசதி
சிறைத்துறை, தீயணைப்பு அலுவலர்களுக்கு மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 12 போலீஸ் ஆஸ்பத்திரிகளில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி சிறைத்துறை அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு குழு அலுவலர்கள் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக 2 உதவி மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 1 மருந்தாளுனர், 1 லேப் டெக்னீசியன் உள்பட 10 பேர் நியமிக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த அலுவலர்கள் தமிழக மருத்துவ துறை மூலம் நியமிக்கப்படுபவர் என்றும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story