ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்


ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:00 PM (Updated: 26 Jun 2023 7:00 PM)
t-max-icont-min-icon

புளியங்குடியில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தென்காசி

புளியங்குடி:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி புளியங்குடியில் நகர ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜயா சவுந்திரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுதா.பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் அலாவுதீன், தி.மு.க. நகர செயலாளர் அந்தோணிசாமி, அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் சுரேஷ், த.மு.மு.க. நகர தலைவர் செய்யது அலி பாதுஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாணவரணி அமைப்பாளர் பாலகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தி.மு.க. நகர செயலாளர் அந்தோணிசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் வகாப், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வேலு, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜாகீர் அப்பாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் முகம்மது நயினார், முகைதீன் அப்துல் காதர், செந்தாமரை, காந்திமதி, பொன்னுதுரைச்சி, ராஜேஸ்வரி, தங்கம், கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Related Tags :
Next Story