ராஜஸ்தானி ஒலிம்பியாட் போட்டி
ராஜஸ்தானி ஒலிம்பியாட் போட்டியை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கிவைத்தார்.
மாணவர்கள் இடையே கல்வி அறிவை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு ராஜஸ்தானி சங்கம் சார்பில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. விளையாட்டு போட்டியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இதில் எல்லை பாதுகாப்புப் படை கமாண்டண்ட் குல்தீப் சவுத்ரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை வருமானவரி கமிஷனர் சுனில் மாத்தூர், இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் ஸ்ரீதரன் ஷரத், தமிழ்நாடு ராஜஸ்தானி சங்க தலைவர் மோகன்லால் பஜாஜ், ஒலிம்பியாட் தலைவர் அசோக் குமார் முந்த்ரா மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் தீபம், உறுதிமொழி எடுத்தல், ஏரோபிக்ஸ் நிகழ்ச்சிகள், தடகளம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இறுதிப்போட்டியில் சுமார் 25 ராஜஸ்தானி பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.