திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் - அணியாவிட்டால் ரூ.500 அபராதம்


திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் - அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
x

கொரானா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 497 பேர், செங்கல்பட்டில் 190 பேர், திருவள்ளூரில் 63 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அந்தவகையில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story