நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்


நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் நேற்று மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசி திருவிழா

நவத்திருப்பதிகளில் 2-வது ஸ்தலமான நத்தம் ஸ்ரீவிஜயாசன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோத்ஸவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் திருமுளைச்சாத்துடன் தொங்கியது. இதனை தொடர்ந்து வரும் 24-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.

திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கொடி பட்டம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து, 11 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

பல்வேறு வாகனங்களில் வீதிஉலா

கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை 9.10 மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு, 11.10 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டியும் நடக்கிறது.

இதேபோல் தினமும் மாலை 6 மணிக்கு பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்தம், சேஷம், யானை, இந்திர விமானம், சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, குதிரை, வெற்றிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

கருடசேவை

திருவிழாவின் 6-ம் நாளான 18-ந் தேதி மாலை 6 மணிக்கு எம்இடர் கடிவான் பெருமாள் கருட சேவையும், 8-ம் திருநாளான 20-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் திருக்கல்யாணமும், 24-ந் தேதி காலை 11 மணிக்கு புஷ்ப யாகத்துடனும் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story