மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட நகர மற்றும் புறநகர் அரசு பஸ்களை உடனடியாக இயக்க வேண்டும். மாநகா் மற்றும் புறநகர் பகுதிகளில் சில அரசு பஸ்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிற்காமல் செல்கிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணமில்லா பஸ் திட்டத்தில் பயணிக்கும் பெண்களை கண்டக்டர்கள் கண்ணியக்குறைவாக நடத்துகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமையில் போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.