வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் திடீர் மரணம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 32 வயதான ஆண் சிங்கம் உயிரிழந்தது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு மணி என்ற 32 வயதான ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.
இதற்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஆண் சிங்கம் மணி பரிதாபமாக இறந்தது. வயது முதிர்வு காரணமாக சிங்கம் இறந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
32 வயதான மணி என்ற ஆண் சிங்கம் கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து 18.6.2000 அன்று மீட்கப்பட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று அதிகாலை 7 மணி அளவில் சிங்கம் இறந்துவிட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.