பெரிய ஏரியில் மராமத்து பணி


பெரிய ஏரியில் மராமத்து பணி
x

ரிஷிவந்தியம் அருகே பெரிய ஏரியில் மராமத்து பணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர் கிராமத்தில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பெரிய ஏரியில் மராமத்து பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜூ, நிர்வாகிகள் சாமிசுப்ரமணியன், அண்ணாதுரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஏரி மராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதில் மதகு சீரமைத்தல், வரத்து வாய்க்காலை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி மன்றதலைவர் கிருஷ்ணபிரசாத், நிர்வாகிகள் செல்வகுமார், சுரேஷ், சிவமுருகன், துணைத்தலைவர் பிலோமினா ஆசிர்வாதம், ஊராட்சி செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story