மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு


மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு
x

கோப்புப்படம்

அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருந்தார்.

சென்னை,

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில் மகாவிஷ்ணுவை போலீசார் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சூழலில் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடந்து முடிந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் மகாவிஷ்ணுவை 20ம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story