லாரி டிரைவர் மர்ம சாவு


லாரி டிரைவர் மர்ம சாவு
x

லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

திருச்சி

ஆவின் பால் பண்ணை

திருச்சி மாவட்டம், துறையூர் பெருமாள்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 44). இவர் பால் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணைக்கு பால் கொண்டு வந்து இறக்கிவிட்டு, லாரியில் படுத்திருந்தார்.

அப்போது ஒரு ஆவின் ஊழியர், கமலக்கண்ணனை பார்க்க வந்தபோது, அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள், கமலக்கண்ணனை பரிசோதனை செய்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

இறந்த கமலக்கண்ணனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கமலக்கண்ணனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அவரது உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக உறவினர்களிடம், அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story