சாலையில் லாரி கவிழ்ந்தது


சாலையில் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM (Updated: 2 April 2023 6:46 PM)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

வேலூரில் இருந்து பழைய டயர்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. செந்தில் (வயது 40) என்பவர் இந்த லாரியை ஓட்டி சென்றார். ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் லாரி சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் செந்தில் காயங்களின்றி தப்பினார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story