இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்கலாம்


இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்கலாம்
x

இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

விருதுநகர்

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் உரிமம் புதுப்பித்தல் மற்றும் இதர நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளதால் சிவகாசி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஆட்சி எல்கைக்குட்பட்ட பதிவுபெற்ற தொழிற்சாலைகள் 2024-ம் ஆண்டிற்கான உரிமத்தை www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக புதுப்பிக்க வரும் 31.10.2023 அன்று கடைசி நாள் ஆகும். உரிமக் கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். 31.10.2023-க்கு பின் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் தொழிற்சாலைகள் தாமதக்கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி தொழிற்சாலை உரிமத்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்களது தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு இணையதளத்தின் வாயிலாகவே உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதுப்பிக்கப்பட்டவுடன் படிவம், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிம நகல் மற்றும் இதர ஆவணங்களை தொழிற்சாலையின் உரிமையாளர், மேலாளர் கையொப்பமிட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story