ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்


ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்
x

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜவாலி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story