தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்


தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 31 Jan 2023 1:00 AM IST (Updated: 31 Jan 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொழுநோய் ஒழிப்பு

காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் தொழுநோய் விழிப்புணர்வு முகாமின் இருவார விழாவின் தொடக்க நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி இரு வார விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுதிறனாளிகளான 4 தொழுநோயாளிகளை கலெக்டர் சாந்தி பொன்னாடை அனிவித்து கவுரவித்தார். பின்னர் தொழுநோய் ஒழிப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் புதிய நோயாளிகளை கண்டுபிடித்து சிகிச்சைக்கு பரிந்துரைத்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஆகியோருக்கு கலெக்டர் சாந்தி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலம் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம் வழியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சென்றடைந்தது.

நிகழ்ச்சியில் தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், காசநோய் துணை இயக்குநர் ராஜ்குமார், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் எழிழரசி மற்றும்அரசு துறை அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story