'பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை' - கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி


பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி
x

பல்கலைக்கழக சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் இன்று கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலகலைக்கழக சிண்டிகேட், செனட் அமைப்புகளில் கவர்னரின் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்குப் பிறகு கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன என்றும், பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்றும் கவர்னர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், நேர்மையான முறையில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story