கும்கி யானை கலீமுக்கு ஓய்வு
காட்டு யானைகளை கட்டுப்படுத்த உதவிய கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதற்கான பிரிவுபசார விழா கோழிக்கமுத்தி முகாமில் நடைபெற்றது.
காட்டு யானைகளை கட்டுப்படுத்த உதவிய கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதற்கான பிரிவுபசார விழா கோழிக்கமுத்தி முகாமில் நடைபெற்றது.
கூடுதல் முதன்மை செயலாளர் ஆய்வு
பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை பகுதியில் வனத்துறை மூலம் ஆனைமலையகம் (பொருள் விளக்க மையம்) கட்டப்பட்டு உள்ளது. இதை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர், உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் உள்ள மலைவாழ் மக்கள் உண்டு உறைவிட பள்ளியை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோழிக்கமுத்தி முகாமில் உள்ள கும்கி யானை கலீமிற்கு வயது 60 பூர்த்தியானதால் ஓய்வு அளிக்கப்பட் டது.
கலீம் யானைக்கு ஓய்வு
இதனால் கலீம் யானைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. ஓய்வு அளிக்கும் நிகழ்ச்சியில் கலீம் யானைக்கு வனத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ கரும்பு வழங்கினார். மேலும் அவர், கலீம் யானையுடன் இருக்கும் புகைப்படத்தை பாகன் மணியிடம் வழங்கினார்.
அப்போது முகாமில் உள்ள மற்ற யானைகள் துதிக்கையை தூக்கி கும்கி யானை கலீமுக்கு பிரியாவிடை அளித்தன. இந்த நிகழ்ச்சி யில் முதன்மை செயலாளர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலீம் யானையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கட்டுக்குள் வரும் காட்டு யானைகள்
விழாவில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாஸ் ரெட்டி, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிர மணியம், துணை இயக்குனர் பார்கவ் தேஜா, திருப்பூர் துணை இயக்குனர் தேஜஸ், உதவி வன பாதுகாவலர் செல்வம் மற்றும் வனச்சரகர்கள் கலந்து கொண்டனர்.
விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டவும், அவற்றை பிடிக்கவும் கும்கி யானை கலீம் வனத்துறைக்கு மிகவும் உதவியாக இருந்து உள்ளது. கலீமின் கம்பீரத்தை பார்த்து காட்டு யானைகள் பயந்து தானாகவே கட்டுக்குள் வந்து விடும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.