பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 17 Aug 2023 10:09 PM GMT (Updated: 17 Aug 2023 10:56 PM GMT)

பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனா்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான யாக பூஜைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி பவானி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தங்களை எடுத்து ஊர்வலமாக பெருந்துைறயில் பவானி ரோடு, கோவை மெயின் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தனர். தாரை, தப்பட்டை முழங்க தீர்த்தக்குடம் ஊர்வலத்துக்கு முன்பாக காங்கேயம் காளைகள், பசு மாடுகள், குதிரைகள் அணிவகுத்து வந்தன. தீர்த்தக்குடம் ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story