தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்


தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்
x

சிதம்பரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் ஆலய குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 19-ந்தேதி சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கிய நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதே போல், சிதம்பரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆரணி பெரியபாளையத்தம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவன், பார்வதி வேடமணிந்து பக்தர்கள் நடனமாடினர். மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை வசந்தீஸ்வரர் கோவில், பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story