அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா- பூச்சாட்டுதலுடன் தொடங்கியது


அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா- பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
x

அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

பூச்சாட்டப்பட்டது

அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும் புகழ்பெற்றதுமான பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் 60 அடி நீள குண்டத்துக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 22-ந் தேதி மகிஷாசுர மர்த்தனம் (எருமை மாடு பலி கொடுத்தல்) நிகழ்ச்சியும், 29-ந்தேதி தேதி கொடியேற்றுதலும் நடக்கிறது.

குண்டம் விழா

மேலும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் மாலை நேரம் அந்தியூரில் வீதி உலா நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுப்பார்கள்.


1 More update

Next Story