கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ஈரோடு
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமையானதுமான வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 31-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையொட்டி கொடுமுடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று (புதன்கிழமை) பொங்கல் விழா நடைபெறுகிறது. வருகிற 10-ந் தேதி முத்து பல்லக்கில் அம்மன் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
Related Tags :
Next Story