கொல்லிமலை நம் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நம் அருவியில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நாமக்கல்
சேந்தமங்கலம்
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மலைப்பகுதியில் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டியதால் இந்த சுற்றுலா தலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி மற்றும் மாசிலா அருவிகள் உள்ளன. கொல்லிமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்தநிலையில் நம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ேநற்று விடுமுைற தினத்தையொட்டி இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் நம் அருவில் குளித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story