கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு ஒரே கட்டண முறை அமல்..!


கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு ஒரே கட்டண முறை அமல்..!
x
தினத்தந்தி 16 Jan 2023 9:59 AM IST (Updated: 16 Jan 2023 10:32 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு ஒரே கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். சிறந்த கோடை வாசஸ்தலமான இங்கு, விழிகளுக்கு விருந்து படைக்கும் ஏராளமான இடங்கள் உள்ளன. பழங்கள் பழுத்து கிடக்கும் மரங்களை தேடிச்செல்லும் பறவைகளை போல, கோடை வெப்பம் தாங்காமல் கொடைக்கானலை நாடி வரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் உள்ளனர்.

கொடைக்கானலில் தற்போது நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பல வண்ண பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இந்த நிலையில், கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா தலங்களை காண ஒரே கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என்ற அடிப்படையில் கட்டணத்தை வனத்துறை நிர்ணயித்துள்ளது. மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை பகுதிகளுக்கு செல்ல தனித்தனியே கட்டணம் தர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story