கலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை


கலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு  கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
x

கலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்புக்கு நீதிக்கேட்டு பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் பள்ளியில் இருந்த பஸ் உள்ளிட்ட வாகனங்கள், போலீசாருக்கு சொந்தமான வாகனங்கள் என்று மொத்தம் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், கலவரத்துக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

போராட்ட களத்தை டியோ பதிவு செய்ய போலீசார் தரப்பில் பயன்படுத்தப்பட்ட 6 கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக, கனியாமூர் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதியில் சேலம் - சென்னை, சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை, கச்சிராயப்பாளையம் சாலை ஆகிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அதன் மூலம் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தற்போது இறங்கி இருக்கிறார்கள்.


Next Story