ரூ.15 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை


ரூ.15 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை
x
திருப்பூர்

முத்தூர்:

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15-லட்சத்திற்கு காங்கயம் இன பசுமாடுகள்,கன்றுகள், காளைகள்விற்பனை செய்யப்பட்டது.

பழையகோட்டை மாட்டுத்தாவணி

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

பசுமாடுகள் விற்பனை விறுவிறுப்பு

மேலும் இந்த காங்கயம் இன கால்நடை விற்பனை சந்தையில் நேற்று காங்கயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி, வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பகல், இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல், மிதமான, பலத்த மழை பெய்தது. இதனால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் காங்கயம் இன பசுமாடுகள் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை புற்கள் அதிக அளவில் பரந்து விரிந்து, பச்சை பசேலென்று நன்கு வளர்ந்து உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் காங்கயம் என பசுமாடுகள் கன்றுகள் வாங்கி வளர்ப்பதற்கு கடந்த 6 வார காலமாக மிகவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 66 காங்கயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 45 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கயம் இன செவலை கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.36 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

1 More update

Next Story