காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நூற்றுக்கால் மண்டபம் புதுப்பிப்பு


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நூற்றுக்கால் மண்டபம் புதுப்பிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2023 3:15 AM IST (Updated: 12 Nov 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் ஒவ்வொரு கதை சொல்லும். அந்த வகையில் ஒரே கல்லிலான கருங்கல் சங்கிலி சிறப்பாக வடிவமைப்புபட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் தொங்கி கொண்டுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நமது கலாசாரத்தையும் பெருமையையும், சிற்ப கலையின் பெருமையையும் உலகுக்கு பறைசாற்றும் வண்ணம் அழகிய, அதிசய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட நூறு தூண்கள் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் ஒவ்வொரு கதை சொல்லும். அந்த வகையில் ஒரே கல்லிலான கருங்கல் சங்கிலி சிறப்பாக வடிவமைப்பு பட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் தொங்கி கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு சிறப்புகள் உடைய நூற்றுக்கால் மண்டபம் தூசி படிந்து காணப்பட்டது. இந்த நிலையில் உபயதாரர் ஒருவர் அளித்த ரூ.10 லட்சம் நன்கொடையின் மூலம் நவீன எந்திரங்கள் உதவியுடன் நூற்றுக்கால் மண்டபம் முழுவதும் தண்ணீர் பீய்ச்சியடைக்கப்பட்டு சிற்பங்கள் உள்ளிட்டவை நன்றாக தெரியும் படி கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

இரவு நேரத்தில் நூற்றுக்கால் மண்டபம் ஜொலிக்கும் வகையில் மண்டபம் முழுவதும் 76 அதிநவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மின்விளக்குகளால் மண்டபம் முழுவதும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.


Next Story