காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
31-ந்தேதி வரை
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 100 சதவீதம் சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 16-ந் தேதி வரை நடைபெற்றது. தற்போது வருகிற 31-ந்தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தை அணுகவும்.
கம்மியர் மோட்டார் வாகனம், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் கம்மியர் மின்னணுவியல், மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, அட்வான்ஸ்டு மிஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 2 ஆண்டு கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேசன் மற்றும்(இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம் இல்லை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.750, விலையில்லா சைக்கிள் மடிகணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷூ, இலவச பஸ்பாஸ் போன்றவை வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண் 9444621245, 8122374342, 8608728554.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.