சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு


சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

காஞ்சீபுரம் மாவட்டம் சந்தவேலூர் ஊராட்சியில் ரூ.27.48 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம்

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 2 கூடுதல் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். சந்தவேலூர் ஊராட்சியில் குடிநீர் வழங்கும் மேல்நிலை தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையல் கூடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு, ரூ.11.97 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், ரூ.16.84 லட்சம் செலவில் பெரிய ஏரி சீரமைக்கும் பணியையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து, போந்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.40.29 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை பார்வையிட்டு, ரூ.17.025 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பானுமதி, சூர்யா, சந்தாவேலூர் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story