கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


கல்வராயன் மலை: முதல்-அமைச்சர் பார்வையிட சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x

கல்வராயன் மலை பகுதியில் முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் விஷ சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story