மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் -நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
சென்னை
2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு
* தாளமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்
* தமிழ்மொழி உலக மொழியாக திகழ பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
* தமிழறிஞர்கள் 591 பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.
* சோழப் பேரரசை போற்றுவதற்கு தஞ்சாவூரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* சென்னை, கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்.
* அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* வரும் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா & இலக்கிய திருவிழா நடத்தப்படும்.
* அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ரூ. 5 கோடி நிதி.
* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 40 கோடி நிதி"
* மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும்.
* பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
* 54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்