மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 'ககன்யான்' என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ‘ககன்யான்’ என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
பணகுடி,
நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் 'ககன்யான்' திட்டத்துக்கு தேவையான ராக்கெட் என்ஜின் பரிசோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்டமாக மொத்தம் 2,750 வினாடிகள் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதில் 5 எண்ணிக்கையிலான 440 என்.எல்.ஏ.எம். என்ஜின்களும், 8 எண்ணிக்கையிலான 100 என்.ஆர்.சி.எஸ். த்ரஸ்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த நிலையில் ககன்யான் திட்ட ராக்கெட் என்ஜினின் சர்வீஸ் மாட்யூல் புரோபல்சன் சிஸ்டத்தின் ஒருங்கிணைந்த செயல்திறன் குறித்து 250 வினாடிகள் என்ஜினை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story