ஜெயலலிதா பிறந்த நாள் விழா


ஜெயலலிதா பிறந்த நாள் விழா
x

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது.

திருப்பத்தூர்

ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கி பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் டி.டி.குமார் பேசுகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் அவைத்தலைவர் ஜி.ரங்கநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் டாக்டர் லீலாசுப்பிரமணியம், துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், நகர துணை செயலாளர் ஏ.ஆனந்தன், தம்பாகிருஷ்ணன், சோடாவாசு, எம்.என்.பி.மகேஸ்வரன், நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மின்வாரிய மண்டல செயலாளர் சி.ரங்கநாதன் நன்றி கூறினார்.

1 More update

Next Story