அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு - மத்திய இணை மந்திரி எல்.முருகன்


அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x
தினத்தந்தி 7 Jan 2024 10:00 PM IST (Updated: 10 Jan 2024 10:44 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அக்கறை வைத்துள்ளார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-

அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் 4-வது மாநாட்டில் தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும், வணிகத்தை பற்றியும் பேசப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. பிரதமர் மோடி தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ் மொழி குறித்து அவரைப் போன்று இங்கு யாரும் பெருமையாக பேசவில்லை.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாஜக சார்பில் மக்களை அழைத்துச் செல்வோம் எனக் கூறிய பின்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அவர்களும் அழைத்துச் செல்வதாக ஒரு வெற்று அறிக்கையை கூறியுள்ளனர். ராமர் கோவில் கும்பாஷேக விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைப்பது என்பது கோவில் நிர்வாகத்தினர் எடுக்கும் முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story